இப்போதும் நதி நடக்கிறது
எப்போதும் நீரோடியதில்லை
எப்போதாவதுதான்
தெளிந்தும்
மணந்தும்
குளிர்ந்தும்
ஓடிய அதன் நீர்மையில்
கரைந்துவிடும் நெஞ்சம்
அது
எப்போதும் வாய்ப்பதில்லை
எப்போதாவதுதான்
போராட்டங்கள் வினைத்தொகை
நடந்தன
நடக்கின்றன
நடக்கும்
விளைவு சொற்பம்தான்
மாரி மனம் வைத்தால் உண்டு
அதனால் என்ன
நவயுகத்தில்
எல்லாவற்றுக்கும் மாற்று உண்டே
நகர்ப்புறக் கழிவு நீர்
விரயமாவானேன்
இப்போதும் நதி நடக்கிறது
எப்போதும் நீரோடுகிறது
அகத்தும்
புறத்தும்
இருளைச் சுமந்தபடி..
- முனைவர் பொ. திராவிடமணி,, தஞ்சாவூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.