கரோனா கற்பித்த பாடம்
உலகத்தின்ஒட்டுமொத்தநீதிநூல்கள்
உரைக்கின்றகருத்துகளின்தொகுப்பேகரோனா
நிலத்திலுள்ளஆறறிவுமனிதனுக்கு
நிற்கவொருஅணுகூடஇல்லாக்கிருமி
நிலையாமைபற்றியொருஉபதேசத்தை
நின்றிங்கேசொல்லியதுமரணத்தாலே
கலகலத்துப்போனதின்றுஞாலமெல்லாம்
கண்ணுக்குத்தெரியாதநுண்மியாலே !
தலைகனத்தேஉச்சிநின்றுஉலகம்தன்னைத்
தம்சொல்லால்ஆட்டிவைத்தவல்லரசெல்லாம்
நிலைகுலைந்துமண்டியிட்டுக்கதறுமாறு
நிலைமையினைமாற்றியதுகரோனாநுண்மி !
கலையறிவால்செவ்வாயில்வீடுகட்டக்
கால்வைக்கமுனைந்தவனின்நுரையீரல்மேல்
அலையலையாய்ப்பெருகிநின்றுகூடுகட்டி
அச்சத்தைஊட்டியதுகரோனாநுண்மி !
பணமொன்றேகுறிக்கோளாய்ஓடியோடிப்
பாசத்தைமறந்திட்டமனிதனுக்குப்
பிணங்களினைச்சாலைகளில்குவியலாக்கிப்
பிணைப்புதனைச்சொல்லியதுகரோனாநுண்மி !
குணமெல்லாம்தன்னலமாய்இயற்கைதன்னைக்
குலைத்திட்டமனிதனுக்குப்பாடம்சொல்லக்
கணக்குதனைப்போட்டுவந்தகரோனாகூற்றைக்
கடைப்பிடித்தேஇயற்கையினைக்காத்தால்வாழ்வோம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.