ஈதல் இசைபட வாழ்தல்
இல்லாதோர்க்கு இருப்பதை இயன்வரை இயம்பலும்!
மனம்முகந்து கருணைப் புரிதலும்
வஞ்சகமில்லா நெஞ்சத்தோடு
நஞ்சகமில்லாது நலம் நல்குவதும்
தலைத்தோங்கிய தருணத்திலும் தர்மம் தருவதும்
விடை தெரியாது வாழ்வோர்க்கு
கொடை கொடுத்தலும்
துன்பத்தில் மூழ்கியவனுக்கு தூணாய் விளங்குதலுமே! ஈதல்
ஈதல் எனும் கடலில் மூழ்கி
புகழ்ச்சி முத்தெடுத்தவர்கள் நம் மூதாதையர்கள்
புகழ்ச்சிக்கும் பெருமைக்கும் மட்டுமே அருளல் இன்றி
வையத்தில் வாழ வரம்பெற்றோர் எல்லாம்
தலையாய அறமாய் கருதுவதும் ஈதலே!
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!
வறியோர்க்கு ஒன்று ஈவதே ஈகை என்றான்
அறிந்து ஆபத்திற்கு அளித்து
இசைபட வாழ்தலே வாழ்வு!
- - சி. கீர்த்தனா, சிவகாசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.