ஒன்று கூட ஒழுங்கில்லை
விரித்த மயில்
தோகையின் அழகின்றி
இழுத்த கோடுகள்
தாறுமாறாக விழ
நவீனமாய்ப் புடைத்து
நிற்கின்றன.
அதில் ராணியவள்
பல்லக்கில் பவனி வர
கோழிகளை குறிவைத்து
சுற்றுகிறது ராஜாளி.
இருப்பினும்
அந்தக் காகிதத்தை
கசக்கிவீச மனமில்லை.
அதை இன்னதென்று
ஒருநாள் காலம்
புரட்டிச் சொல்லட்டும்.
அந்த மௌனம் உடைபட
கசியட்டும் அதன்
மொத்த ரகசியமும்.
பூக்களின் மொட்டுடைந்தது
காற்றில் எங்கும்
வீசும் வாசம் போல்
நீல வானத்தில் ஓடும்
மேகங்களின்
திசையைக் காற்றே
தீர்மானிக்கிறது.
இழுத்த கோடுகளில்
ஒன்றுகூட ஒழுங்கில்லை.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.