ஒத்தூதி வாழ்வதெல்லாம் வாழ்வா?
தன்வாழ்வுசிறப்பதற்குப்பிறரின்முன்பு
தலையாட்டும்பொம்மைகளாய்ஆடுவார்கள்
புன்செயல்கள்ஊரறியசெய்தபோதும்
புகழ்தவரின்கால்களினைநக்குவார்கள் !
வன்முறையில்அடுத்தவரைவதைத்தபோதும்
வாய்மூடிநாய்வாலாய்ஆட்டுவார்கள்
என்னவெல்லாம்இழிவாகப்பேசினாலும்
ஏற்றவர்க்குப்பல்தன்னைக்காட்டுவார்கள் !
காக்கைதான்பிடிப்பதாகஏளனத்தில்
காதுபடச்சொன்னாலும்நாணம்கொள்ளார்
யாக்கையதுஇருப்பதெல்லாம்குறுகிக்கூனி
யாசிக்கஎனத்தாழ்ந்தேவணங்குவார்கள் !
வாக்குதனில்இந்திரன்சந்திரனாம்என்றே
வகைவகையாய்ப்பூமாலைசூட்டுவார்கள்
நோக்கமெல்லாம்உழைக்காமல்பிறருழைப்பில்
நோகாமல்உண்பதென்னும்கொள்கைகொண்டோர் !
ஓங்குபொருள்இன்பவாழ்வுகிடைக்குமென்றே
ஒத்தூதிவாழ்வதெல்லாம்வாழ்வாசொல்வீர்
ஏங்கியேங்கிப்பிறருடையப்பொருளுக்காக
ஏமாற்றிவாழ்வதெல்லாம்வாழ்வாசொல்வீர் !
நீங்காதபழிவந்துசேருமன்றி
நிறைவாழ்வோமனமகிழ்வோகிடைத்திடாது
பாங்காகவாழ்வதெனில்தன்னுழைப்பில்
பணியாமல்மானமுடன்வாழ்வதாகும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.