தொலைத்த பிறகே...
பிடாரனானப்
பொழுதுகள்...
அற சமரச
அகழ்வுகள்...
வேட்கை மிகு
அமர்வுகள்...
கடைவாயின்
இனிக்கனவுகள்...
மேற்தோலையுமுறும்
மேவல்கள்...
மறுமுறைக்கான
ஆவல்கள்...
மெய்ப்பை நிறைத்தும்
ஆலிங்கனங்கள்...
கைப்பை நிறையின்
ஆகார புவனங்கள்...
இருப்புக் குலையா
களவுகள்...
பொறுப்பு விலகா
கற்புகள் - என
இத்தனைப்
பன்மைக்கும்
ஒருமையான
அந்தக்
'கள்ளெக்' காட்டிற்கான
தேடல் தொடர்கின்றது...
தொலைத்தப் பிறகே
அர்த்தம்
மிகுந்திருக்கின்றது
இந்த
ஒருமைக்கு...
- முனைவர் கோ. சுனில்ஜோகி, கோயம்புத்தூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.