இறைவி...

எழுத்தறிவித்தவன் இறைவன் என்றால்
என் கவிதைகளை இப்பிரபஞ்சத்தில் விதைக்கச் செய்த
என் இறைவி நீ ...
ஒரு கவலையும் இல்லாமல்
பட்டாம்பூச்சியைப் போலச் சுற்றித் திரிந்தவனை
ஒரு சிறைக்குள் எப்படி
தானே அடைய வைத்தாய் ?
உன் தவறு என்னவென்று என்னிடமேக் கேட்கலாம்
அடுத்தவரை காதலால் வதைக்க
தேவதையாய் அவதரித்ததே தவறுதானே?
இதுவரை என்னிடம் பேசாத
உன் குரல்கள் என்னுள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கிறது
உன் பார்வை அனுதினமும்
பொசுக்கிக் கொண்டிருக்கிறது
நகம் - முடி என உன்னிலிருந்து உதிர்ந்த உயிரற்றவைகள் கூட
என்னை இம்சைப்படுத்திக் கொண்டிருக்கிறது...
ஒரு காலத்தில் சொர்க்கமாய்த் தெரிந்த அறியாத வாழ்க்கை
இப்போது நரகமாய் அர்த்தத்துடன் சென்று கொண்டிருக்கிறது
இந்த உலகத்தில்
எதை உனக்கு முதலில் கற்றுக் கொடுக்கிறார்களோ அவர்களே
பிரம்மன் -குரு-ஆசான் எல்லாமுமே
என்னைப் படைத்த பிரம்மன் அன்னை என்றாலும்
விண்ணைக் கடந்து பறவையாய்
திசை தெரியாமல் திரிந்தவனை
மனிதனாய் மாற்றிய நீ
என் காத ல்குருதான் ...
வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்த குரு ...
தோல்வி- சோகம் - விரக்தி -அவமானம் என
எதைச் சந்தித்தாலும்
வாழப் பழகிக் கொண்டேன் ...??
நீ கற்பித்த காதல் பாடத்தால்!!!
- நௌஷாத் கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.