கொரோனா - ஹைக்கூ
ஊரடங்கு... அடங்கியது ஊர்
அடங்க மறுக்கிறது...
கொரோனா?
*****
அகிலத்தையே அடக்கியது ஆறறிவு
இன்று அடங்கிக் கிடக்கிறது...
கொரோனாவிடம்.
*****
பெரும் சாம்ராஜ்யங்களை
மண்டியிட வைத்த வல்லரசுகள்
கொரோனாவிடம் பெற்றன ஞானம்!
*****
எங்கள் முன்னேற்றத்தில்
உனக்குக் கூட பொறாமையா?
கொரோனா.
*****
கொரோனாவைக் காட்டிலும்
கொடியது...
போலிஸ் தடி!
*****
ஆவி பிடித்தலே போதும்
ஆவி போகாதாம்...
கொரோனா மருத்துவம்!!
*****
கால்நடைகளுக்கான ஆட்சி...
கால்நடைகளாய் மக்கள்...
காலத்தின் கோலம்!
*****
'பிச்சை' கொடுக்கல் வாங்கலுக்குக் கூட
அதி பஞ்சம்...
கொரோனா!
- கவிஞர் இமாம் கவுஸ் மொய்தீன், செங்கல்பட்டு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.