வெட்டப்பட்ட மரங்களின் வேதனை
மரங்களாகத் தானே யாம் இருந்தோம் - மர
மண்டைகளுக் கேன் புரியவில்லை...?
பூக்கள் காய் கனிகள் தழைகள் காற்று
நிழல் மருந்துகள் தேன் தேக்கு சந்தனம்...
வாழ்கையில் அனைத்தும்
நிறையத் தந்தோம்.
நாங்கள் இருந்தோம்...நிறைவாய்ப்
பெய்தது பருவ மழை!
ஆறு ஏறி குளம் குட்டைகள் என நிறைந்து
இருந்தன நீர் நிலைகள்!
காற்றில் சுத்தம் நீரில் சுத்தம் மனித
மனங்களும் அதி சுத்தம்!
பறப்பன ஊர்வன நடப்பன நீந்துவன என
நிறைவாய் இருந்தன காடுகள் மலைகள்!
முற்போக்காய் இருந்தன மனித மனங்கள்!
நோய்க்கு தீர்வாய் கிடைத்தன மூலிகை
மருந்துகள்... இன்னும் நிலையாய்
என்னென்னவோ வளங்கள்!
காலச் சூழலில் வெட்டப் பட்டன மரங்கள்!
காணாமல் போயின... பறவைகள்
விலங்குகள் பட்டாம்பூச்சிகள்!
பொய்த்துப் போனது பருவமழை!
வறண்டு போனது பூமி...
வெட்டியாய் இன்று மரம்வெட்டி!
பெருகிப் போயின ...
பசித்த வயிறுகள்...
காலிக் குடங்கள்
கண்களில் நீர்...
நன்றி மிக்க நாய்கள் வாழும் நாடிது...
மனிதற்கேனோ... புரியாமல் போனது.!!
- கவிஞர் இமாம் கவுஸ் மொய்தீன், செங்கல்பட்டு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.