மௌன விழிகள்
பேசாத விழிகளும் பேசுகின்றன
நான் பேச நினைக்கும் போதெல்லாம்
அதனாலோ என்னவோ?
உன்னிடம் பேச
இன்று வரை
எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை
மௌனமே உருவாய்…
புன்னை பூத்தா எனக்கென்ன
பூவும் அழுதால் எனக்கென்ன
அந்தப் பூவைச் சூட
அவளும் என்னிடமில்லையே…
உணவும் கசக்கவில்லை
உறக்கமும் இல்லாமலில்லை
உயிரே!
உன்னோடு நானுள்ள மட்டும்!
தென்றலும் வீச மறுக்கின்றது
நான் போகும் திசையெல்லாம்
மறந்து வீசினாலும்
என் மீது மோதுவதே இல்லை
நான் தென்றலுக்கென்ன
எதிரியா…?
உலகமே வெப்பமானாலும்
என் உள்ளம் மட்டும்
சூடாவதே இல்லை
என் உள்ளத்தில் தான்
அவளிருக்கிறாளே…!
- பீ. பெரியசாமி, விளாப்பாக்கம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.