மழை பெய்யும் மாலை
மழை பெய்கிறது. விருந்தினர் வருகை
எதிர்பார்த்து வீடு. நீர்த்துளி தொடர்ந்து
விழும் ஓசை. மாலை நீண்டு இரவு
கவிகிறது. மூடிய வாசற் கதவில
சிறு ஓசை கேட்கிறது. திறந்து பார்த்தால்....
ஹைக்கூ
மழைபெய்யும் மாலை
எதிர்பாரா விருந்தினர்
வாசற்படியில் தவளை
(இது ஒரு ஹைபுன் கவிதை)
* பல்வேறு குணாதிசயங்களுடன் இணைந்த உரைநடையுடன் ஹைக்கூவினை இணைத்து எழுதும் வடிவமே ஹைபுன் - பால் காண்லே
** ஹைபுன் என்பது ஹைக்கைத் தன்மையுடன் கூடிய குறுகிய உரைநடையுடன் கூடிய ஹைக்கூ வடிவம். இது மெல்லிய நகைச்சுவையுணர்வுடன், அல்லது அதிக உணர்வுப் பூர்வமான தன்மையுடன் விளங்கும் - அமெரிக்க ஹைக்கூ கழகம்
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.