பெருங்கிழத்தி
படர்ந்து கிடக்கும்
கொடியின் தனித்துவமானது
அவளது இருப்பு
அது சதா பூக்களையும் கனிகளையும்
உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கிறது
வண்ணங்கள் இறைந்து கிடக்கின்றன
வழிகள் தோறும்
யாருக்காகவும் கறுத்ததில்லை
அவளது ஆகாயம்
சுவர்களுக்குள் சுருங்கிக்கொள்ளாத
அவளது றெக்கைகள்
பறந்தே நிறைகின்றன
கணங்கள் தோறும்
நெடியேறும்
துரோகத் தூரிகைகள் துளியும் இல்லை
காற்றின் ஈர வாசமென அசலானவள்
பொருத்தமற்ற பொழுதில்
பொருந்திடாத
எதையும் அவள் தொடுவதே இல்லை
அவள் தேசம் எப்பொழுதும்
வானவில்லோடு
வாழ்வை முழுதாய்ச் சூட்டிக்கொள்கிறது
சுடு சொல்லற்ற
பெருங்கிழத்தியான அவளிடத்தில்
நிரம்பி வழிந்தபடியே
மலர்ந்து கிடக்கிறது
எப்பொழுதும்
ஒரு சிறு வனம்.
- இந்திரா அரசு, தஞ்சாவூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.