கலைஞரின் புகழ்
ஆகத்தில் வித்தாய் விளைந்து
முளைத்து வளர்ந்து அடியெடுத்தாய்
முத்துவேலாய்! எழுச்சி மிக்க
மாணவர்களைத் தட்டி எழுப்பினாய்
மாணவ நேசனாய்! அகவை
பதினான்கில் தன்னை
அர்ப்பணித்தாய்! அரசியலுக்கு!
அரசனாய் உலா வருகையில்
கல்லக்குடிக்கு கலைச்சொல் இட்டு!
"இந்தி"உணவு விடுதி உணவு!
"தமிழ்" தாயிடமிருந்து பெறப்படும் உணவு
என்று உரக்கமிட்டாய்!
இந்தித் திணிப்பு போராட்டத்தில்!
ஆற்றுப்படுத்தும் ஆசானாய்!
திராவிட முன்னேற்றக் கழகத்தில்
தங்க விழா காணும் தலைவனாய்!
தகைமைப் பெற்றாய்!
என் கடன் பணி செய்து கிடப்பதே என்று
அரசியல் பணியையும் இரு கண்களாய் கருதினாய்!
கலைஞரே! காலங்கள் கடந்தாலும்
கட்டுமரமாய் நிற்கிறது நின் புகழ்!
ஆகத்தில் பிறந்தது சம்பவமானாலும்
மக்களின் மனதில்! ஆகத்தில் இறந்து!
சரித்திரமாக்கினாய்!
- - சி. கீர்த்தனா, சிவகாசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.