ஆரஞ்சு மிட்டாய் சுதந்திரம்
எல்லாம் நானறியேன்
என்னவென்று
இப்படியுரைப்பேன்
முன்போல் நானிருந்தால்
‘அடிமை’யென்ற வருத்தமென்பேன்
இன்னாள் சுதந்திரத்தில்
எத்தனை விழுப்புண்கள்தான்
தாங்கியழுவேன்...
அகிம்சை விதையதில்
அன்பு, கருணை, சகிப்பு
முளைத்தெல்லாம்
முரண்பட்ட விருச்சங்களாகின
அதுவே முப்போக
விளைச்சலாகியதேன்…
சமூகத்தின் கிளைகளில்
விரோதந்துளிரவதையே
விரும்புகிற போக்கில்
பகைமை படர்வதெல்லாம
இயல்புபோலாகிவிட்டதில்
உடன்பாடில்லையேல்
இனக்கமான பேசுதல் ‘பூ’
பூக்கச்செய்தலில் யாருக்கும்
மனசொப்பவில்லையோ...
சனநாயகக்காற்று தானே
திறந்து விடப்பட்டது
சுவாசித்தபிறகேன் பல தரவு
நச்சுப்புகை மூட்டமேன்…
நீண்ட தேசமிதில்
நீண்ட நிம்மதியின்மை
ஆனாலும் இமயமுதல் குமரிவரை
ஒரே இதயத்தடிப்பென்ற
ஆரஞ்சு மிட்டாய் இனிப்பு!
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.