சுதந்திரதேவியே வருக...
சுதந்திரதேவியே
பயமின்றி வருக
பாதுகாப்பெல்லாம்
கனகச்சிதமாய்
ஊரடங்கு உனக்கன்று…
எல்லோரும் இங்கே
முன்னெச்சரிக்கையுடன்
முகவட்டமணிந்தே
உனக்குங்கூட
இதோவுண்டு...
சுதந்திரதேவியே
எங்கே கைகள் நீட்டு
சில சொட்டு
சானிடைசர் இட
உருட்டி மடக்கி
தேய்த்துக்கொள்க...
கிருமிநாசினி
தெளித்த மூவர்ண
தேசியக்கொடி
இதோ
பற்றிக்கொண்டு
நிமிர்ந்திடுக...
சுதந்திரதேவியே
சமூக இடைவெளியில்
இந்திய ஒற்றுமையாய்
உனக்கோர்
‘வணக்கம்’
ஏற்றுக்கொள்ளவே
ஆண்டுதோறும் போல்
வருக...!
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.