தடுப்பூசி
அட்டவணைப்போட்டு
திட்டப்படி போட்ட
அத்தனை தடுப்பூசியும்
விவரமில்லா குழந்தை வயதில் ஞாபகத்தில்!
நில்லாமல் நடந்தே முடிந்திருக்கிறது!
மூச்சடைத்து அழுதகதையும்
அழுத்திவிட்ட ஒத்தடமும்
அவதிப்பட்டுக் கடத்திய காய்ச்சலும்
அம்மா சொல்லியே அறிந்தாலும்...
தடங்களால்
தடவிப்பார்த்தும் புரிகிறது!
யார் யாரோ ஊசிக்கு
அழும் போதெல்லாம்
தழும்புகளைத் தடவியே
விசாரித்துக் கொள்கிறது மனது...
தடுப்பூசிகளின் வலிகளை!
இன்னும் ஒரு தடுப்பூசிக்கு
பூட்டியேக் கிடக்கிறதேப் பள்ளி...கள்
திறந்தாத் தடுப்பூசி வருமோ
தீரா வலி தருமோ!
வலியில்லாத்
தடுப்பூசிக்கு
வழியுண்டோ!
வலித்தேக் கேட்கிறது...
விவரமாய் பிள்ளை!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.