மனித உரிமை மதித்திடுவோமே!
மானிடனாய்ப் பிறந்ததுவே மாதவ நற்பேறாம்!
மானுட மாவாழ்வில் உரிமைகள் மலிந்துளவே!
இயற்கையில் இயல்வனவும் சட்டமாய் இயன்றனவும்
அறவுரையாக ஆன்றோர்கள் அருளிய
உரிமைகளை உண்மையாய் உலகுக்கு அளித்திடுவோமே!
நான் வாழுமாறே நானிலமும் நலமாக வாழட்டும்!
உருவு கண்டு எள்ளாமல் ஒருவரையும் பழிக்காமல்
பறிக்க முனையாமல் பல்லுயிரோம்பிப் பகைதவிர்த்து
வள்ளுவ வாய்மையை வாய்ப்பாக்கி வளமுறுத்தேல்!
உரிமையும் கடமையும் உடலும் உயிருமாம்.
உரிமைமீறலை உரிமையுடன் எதிர்த்திடுவோம்!
பண்பாட்டைப் போற்றிப் பரந்தவுள்ளம் பெற்றிடுவோம்!
மானுட வெற்றிக்கு மணிமகுடம் சூட்டிடுவோம்!
- குழந்தைசாமித் தூரன், புதுச்சேரி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.