யார்... நீ...?
காலங்கள் மாறுகின்றது
காணும் காட்சிகளும் மாறுகின்றன
மனிதனும் மாறுகின்றான்
அவனது மனமும் மாறுகின்றது
காலங்களுக்கு ஏற்ப மனங்களை
மாற்றுவது சரியா? தவறா?
தெரியவில்லை...
சரி என்று மாற்றிவிட்டால்
சில மனங்கள் உடைக்கப்படுகின்றன
தவறு என்று மாற்றாவிட்டால்
தன் மனம் உடைந்துவிடுகிறது
பிறருக்காக யோசிப்பதா? இல்லை
தனக்காக யோசிப்பதா?
எதுவும் தெரியவில்லை...
பிறருக்காக யோசிக்க நீ
தியாகியும் அல்ல...
உனக்காக யோசிக்க நீ
சுயநலவாதியும் அல்ல...
அப்படியானால்... யார் நீ?...
- பரிமளா முருகேஷ், திருப்பூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.