உயிராய் நீயே...!
அன்பின் உருவாய்! போதிக்கும்
ஆசான் திருவாய்!
இரக்க உணர்வாய்! - தொழும்
ஈசன் ஒளியாய்! - என்றும் நிலைக்கும்
உறவாய்! - மனம் தளரும் போது
ஊக்கமளிக்கும் தன்னம்பிக்கையாய்!- நல்
எண்ணம் விதைக்கும் பனுவலாய்!
ஏற்றம் கொடுக்கும் ஏணியாய்!
ஐ மிக நிறைந்து,
ஒண் பொருந்தியவளாய்!
ஓராட்டு பாடும் குயிலாய்! நோய் தீர்க்கும்
ஔடதமாய் திகழும் அன்னையே! நீ எனக்கு
உயிர் கொடுத்ததால் தானோ…
உனக்காக எழுதிய கவியில்,
உயிரெழுத்து ஆதியாய் அமைந்துள்ளதோ?
- மா. முத்து காயத்ரி, சிவகாசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.