கம்பலை!
மானிடப் பிறப்பாய் மண்ணில் உயிர் பெறும் கணம் ஒர் கம்பலை!
மண்ணில் வாழ மனித நிலையில் கண்டான் ஓர் கம்பலை!
மண்ணாய் போவோம் என்றறிந்தும் மானிடம் மறந்து
மக்கள் செய்வதும் ஓர் கம்பலை!
மண்ணில் புதையுறும் கணம் ஆங்கே
அன்பின்பால் ஓர் கம்பலை!
இப்பாரில்
மெய்ஞானம் பெற்றார் காண்பதில்லை கம்பலை!
கரிகாலன் காலம் தொட்டு கலிகாலம் வரை கண்டோம் கம்பலை!
கம்பலை இன்றி வாழ்வில்லை!
கம்பலையற்ற வாழ்வுமது
ருசியில்லை!
கம்பலையது கொண்டளவில்
கவலையற்ற வாழ்வுமது நின்கையில்!!!
- கா. கௌசல்யாதேவி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.