நிமிர்ந்து நில் தோழா!
எல்லாரும் ஓரினம் என்ற கொள்கை வகுத்திட்ட
நல்லோரின் பாதையின் நலம் கெட்டால்
கல்லாதவனையும் கைதாங்கலாய் அணைத்து
சொல்லால் உரமேற்றி களத்தில் நிமிர்ந்து நில் தோழா!
பாரத மக்களின் கனவுகளை தீயிட்டு
ஓரமாய் ஒதுக்கும் அதிகார வர்க்கத்தின்
கரம் ஒடுக்க, ஒன்றிணைந்து போராட
சிரம் உயர்த்தி களத்தில் நிமிர்ந்து நில் தோழா!
அன்னத்தை அகலத்திற்கு அளிக்கும் உழவனின்
துன்பத்தைக் கலைக்கும் மானிடச் சூரியனாய்
இன்பத்தைக் காட்ட வெகுண்டெழுந்து ஒளிபரப்ப
என்றென்றும் களத்தில் நிமிர்ந்து நில் தோழா!
- விருதை சசி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.