தீபாவளி...
தூரல் நிற்காத வைகறை
துயிலெழும் மழலைகள்
சிறுவாட்டு காசில் வாங்கிய
நமத்துப் போன புஷ்வானம்,
அடம் பிடித்தாலும்
விடாத அம்மாச்சியின்
நல்லெண்ணெய் குளியல்
மினுமினுக்கும் புத்தாடை
ஏப்பம் வரும்வரை
இட்டலியோ தோசையோ
கொஞ்சம் கோழிக்கறி
கொஞ்சும் உறவுகளோடு
அடுத்தத்தெரு ஆடம்பதாரிகளின்
ஆனை வெடிச்சத்தம்,
ஆங்காங்கே தென்படும்
அழகான பெண்கள் கூட்டம்,
டூரிங் டாக்கீஸில் டிக்கெட்
கிடைக்காத ரஜினி படம்,
அலுக்காத பழைய
நண்பர்களுடன் அரட்டை
பிறகு கொஞ்சமாய் குட்டித்தூக்கம்
மறக்க முடியாத நாளாயினும்
மறந்துபோன நரகாசுரன்
இப்படியாகவே இந்த வருடமும்
கடக்க நினைக்கிறேன்
என் தீபாவளியை! ஆனால்,
குறுக்கே நிற்கிறது கொரோனா..!
- இல. கருப்பண்ணன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.