வள்ளியம் என்னும் செருக்கடைவோம்!
(திருக்குறள்: 598ஐ விளக்குவது)
உலகம் உய்ந்திட உயர்வு வாய்த்திட
வான்மறை வள்ளுவம் வகுத்த வாய்மொழி!
மானுட மேன்மை மகுடம் சூடிட
அனைவரும் அடிப்படை அறநெறி அறிவோம்!
ஈட்டி வகுத்து வகையறிந்து வழங்குவோம்!
அன்பையும் அருளையும் அளவின்றி ஈவோம்!
அறிவைக் கொடுப்போம்! நன்னெறி புகட்டுவோம்!
தன்னிலை உயர நன்னிலை செழிக்க
உறுதியான உள்ளம் உடையதன் விளைவாய்
ஈத்துவக்கும் இன்பம் இனிமையாய் இயன்றிட
தாளாண்மையும் வேளாண்மையும் தகைபெற நடக்கட்டும்!
பாத்திரம் அறிந்து பிச்சை இடுவோம்!
பாரோர் செழிக்கப் பசிப்பிணி களைவோம் !
நல்நீர்க் கிணறாய் மருந்தாகும் மரமாய்
உயர் எண்ண ஊற்றாம் உள்ளத்தினனாய்
வள்ளியம் என்னும் வளனார் வண்மையால்
வளர்நோக்குடைச் செருக்கடைவோமே!
- குழந்தைசாமித் தூரன், புதுச்சேரி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.