கோலம் கோலமாய்....
ஒவ்வொரு புள்ளியாய்த்
தேடியதில்
அவள் மனம்
எங்காவது தென்படுகிறதா என
எட்டிப் பார்த்தேன்
எண்ணியும் பார்த்தேன்
நெளிவும் சுழியுமாய்
நினைவுபடுத்தின
வாழ்க்கைப் பாதையை
எறும்புக்கு உணவிடும்
கோலமாவில் அவள்
இரக்கத்தைக் கண்டேன்
ஒவ்வொரு கோட்டின் முடிவில்
அவள் முயற்சியைக் கண்டேன்
பூரண அழகு பொலிவுறும்
கோலத்தில்
அவள் குதூகலம் கண்டேன்
எண்ணி வைத்த புள்ளிகளில்
பண்ணி வைத்த கோலத்தில்
அவள் நேர்த்தியைக் கண்டேன்
முற்றிலும் போட்டு
முடித்திருந்த கோல நடுவில்
முத்தாய்ப்பாய் வைத்த
பூசணிப் பூவில் அவள்
புன்னகை ஒளிரும் முகங் கண்டேன்.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.