பொறிபுலன் அடக்குவோம்!
மலராய் மலர்வோம்
கனியாய் இருப்போம்
உளமாய் கொடுப்போம்
உயர்வாய் நினைப்போம்
பாதை அமைப்போம்
பக்குவம் காப்போம்
போதை தவிர்ப்போம்
புனிதம் நிறைப்போம்
கீதை படிப்போம்
கீழ்க்குணம் ஒழிப்போம்
நாதன் நாமம்
நாளுமே நவில்வோம்
குறைகள் களைவோம்
நிறைகள் காண்போம்
மறைகள் மொழியினை
மனதில் பதிப்போம்
அந்தமில் ஆதியை
அகத்தில் காண்போம்
சந்ததம் இறையை
சிந்தையில் கொள்ளுவோம்
திருமுறை நாடுவோம்
தினமுமே ஓதுவோம்
கனவிலும் இறைவனை
கண்டுமே மகிழுவோம்
இனிமையாய் பேசுவோம்
இட்டுமே உண்ணுவோம்
பொறுமையைக் காணுவோம்
பொறிபுலன் அடக்குவோம்!
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.