தோழியே...!
உன் சிரிப்பால்
என்னை சிகரம் ஏற்றினாய்...
உன் வெற்றியால்
என்னை விவேகப்படுத்தினாய்...
உன் கைகளால்
என்னை சிற்பமாய் செதுக்கினாய்...
உன் வார்த்தைகளால்
என்னை வெற்றிகள் சூழச் செய்தாய்...
பிரம்மன் கருமி ஆனான்
உன் போல் தோழி படைக்காததால்...
பூக்கள் பொறாமை பட்டது என் மீது
நீ என் தோழியானதால்...
கவிதை எழுத நினைத்தேன்
உன்னைப் பற்றி...
அகராதியிலும் தேடினேன்
உன் அன்பை விவரிக்க
ஓர் வார்த்தை...
இல்லை இல்லை கிடைக்கவில்லை...
என் இதயம் போதவில்லை
நீ காட்டும் பேரன்பைச் சுமக்க...
- ஞானப்பிரியதர்ஷினி, கெருகம்பாக்கம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.