உழைத்திடு ஒன்றாய்...
மனிதனை மனிதன் ஏய்த்திடாமல் என்றும்
மற்றவர்க் குதவியாய்ச் செயல்படுவாய் மனிதா,
தனியா யுலகில் வாழ்வில்லை என்பதால்
தக்க பணிகளைச் செய்திடுவாய் நீயே...
உழைப்பின் வகையில் வேறுபாடே இல்லை
உயர்வு தாழ்வென உரைத்திடவே வேண்டாம்,
உழைப்பவர் யாவரும் ஒன்றெனவே நினைத்தால்
உலகில் வராதே உதவாத தடைகளே...
நாற்று நடுவோர் நல்லிதயச் செவிலியர்
நம்மைச் சுற்றிப் பற்பலரின் செயல்களில்
ஏற்றமும் தாழ்வும் எதனிடத்தும் இல்லை
எல்லாத் தொழிலும் எழிலுடைத்தே இங்கு...!
- செண்பக ஜெகதீசன்.
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.