நிறங்கள்
நிறங்கள் இல்லாத நாளில்
எப்போதும் போல்
நிறங்களோடு வந்திருக்கிறாய்.
நீ கொண்டு வந்திருக்கும்
நிறங்களைக் காண
இங்கு யாருக்கும் விருப்பமில்லை.
ஒவ்வொரு தெரிந்த முகங்களையும்
அமர வைத்து நிறங்களை
வகைப்பிரித்துக் காட்டுகிறாய்.
நிறங்களின் முகத்தில் வறட்சியும்
சோகமுமின்றி அதன் புன்சிரிப்பை
அவ்வெளியெங்கும்
முழுவதுமாய்க் கசியவிடுகிறது.
மனிதத்தின் பல விஷயங்களோடு
தொடர்புடைய நிறங்களை நம்மோடு
பொருத்திப் பார்க்க நானும் நீயும்
தவறிக் கொண்டிருக்கிறோம்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.