வழிகாட்டிகள்
அம்மாவும் அப்பாவும்
உருவத்தில் வேறானாலும்
குழந்தைகளிடம்
அன்பு பாராட்டுவதில்
சலித்தவர்கள் அல்ல...
அம்மா நிலவைக்
காட்டிச் சோறு ஊட்டுவாள்...
அப்பா உண்மைகளைக் காட்டி
புத்தி உரைப்பார்...
அம்மா அன்பின்
பெட்டகம்...
அப்பா அறிவின்
பெட்டகம்...
அம்மா சொந்தங்களை
சுகங்களைச் சொல்லித்
தருவாள்...
அப்பா சோகங்களைக்
களையக் கற்றுத் தருவார்...
அப்பாவும் அம்மாவும்
இரயில் தண்டவாளங்களாய்
நம் வாழ்க்கையில் வரும்
இன்ப துன்பங்களைக் கடந்து
இனிய பயணம் செய்யச்
சிறந்த வழிகாட்டிகள்...
- ஞானப்பிரியதர்ஷினி, கெருகம்பாக்கம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.