அம்மா... அம்மா...
துயிலும் போது
உன் விரல்
பிடித்த நினைவு
மறக்க முடியாமல்
தவிக்கிறதே அம்மா...
கடைவீதி சென்றால்
தேன் மிட்டாய்
பிடிக்கும் என
வாங்கித் தந்த
சுவை இன்னும்
நாவில் இனிக்கிறதே
அம்மா...
நீ கற்றுத் தந்த
பாடங்களை
பிழையின்றி
பயிலும் போது
நீ தந்த பாராட்டு
உச்சி முகர்ந்து
தந்த முத்தம்
இன்னும் சிலிர்க்க
வைக்கிறதே அம்மா...
அழகான ஓவியங்கள்
சுவற்றில் கிறுக்கிய
பின் அவையே
வண்ணக் கோலங்களால்
நான் வரைந்து பரிசு
பெற்ற போது
மண் வளையல்
பரிசு தந்தாயே
அதன் ஓசை
மனதில் ரீங்காரமாய்
ஒலிக்கிறதே அம்மா...
சுவையாகச் சமையல்
செய்ய எளிமையான
குறிப்புகள் தந்து
மனதில் ஆழமாகப்
பதித்தாயே அம்மா...
அன்பால்
என்னை வென்றாய்
அம்மா...
ஒரு நாளும் உன்
கரம் என்னை
அடித்ததே இல்லை...
அணைத்தே என்னை
அன்பால் உயர்த்தினாயே
அம்மா...
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.