பயமறியாக் குஞ்சுகள்
இரைத்தேடிப் பறந்ததும்
கூட்டை மொய்க்கும் தேனீக்கள்
பயமறியாக் குஞ்சுகள்
*****
கடலுக்குள் ஒரு முனை
மலை மறைவில் மறு முனை
காலூன்றுவதற்குள் காணவில்லை அரைவட்டம்
*****
உடனேக் கிட்டியது
கண்ணாடிப் பேழைக்குள் சிக்கிய வண்டுக்கு
பூதவுடலின் தரிசனம்
*****
பின்னிரவு மழை
குழிநீர்களைக் கோடிட்டுக் காட்டி
நனையும் முன் மறையும் மின்னல்
*****
காப்பகத்தில் தொற்று
சமூக இடைவெளியுடன் தாயைத் தொடர்கிறான்
நீண்ட இடைவெளியில் சந்தித்தவன்
- முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.