தினமும் பேசுகிறேன்

தனிமை
காதலி தந்த கடைசி பரிசு
அழகிதான் அவள்
அழவைத்த பின்னும் நேசிக்கிறேனே
மறந்தே போனது
பேசாத நாட்கள்
தினமும் பேசுகிறேன்
அவள் தந்துபோன
நினைவுகளோடு
காலங்கள் மாறும்
காதல் கைகூடும்
அவள் நினைவுகள்
நெஞ்சோடு சேரும்
உயிர் வாழும் மட்டும்
பேரழகி, மனதின் மகாராணி
மறுத்தாலும் மறந்தாலும்
என் நினைவோடு அவள்
ஏதேதோ பேசுகிறேன்
எதிர்வினை தான் ஏதுமில்லை
திடுக்கிட்டேன் கனவென உணர்ந்தேன்…
நீ,நான், நாம் - காதல்
நாம், நான், பீ - பிரிவு
சிவப்பு, கருப்பு
இதழ், இதயம் உனக்கு
தேன், தீ
பேச்சு, செயல் - நீ
மறந்தேன், மரணித்தேன்
காதல், உயிர்
தீயாய் தீண்டுகிறாய்
பனியாய் உருகுகிறேன்
சல்லாப கனவினிலே…
மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன
உன் நினைவுகளை மட்டும் விலக்கி விட்டு
காதலிக்க நேரமில்லை
காதல் இரகசியமானது
காதலியும் அவ்வாறே…
பிரிவிலும் மகிழ்கிறேன்
அவள் நினைவுகளோடுவாழ்வதினால்
மனம் இல்லாத சிலரிடம் தான்
குணம் கூடிக்கொண்டேப் போகிறது
நம்மை ஆட்கொள்ள…
பார்க்கவில்லை, பேசவில்லை
நினைவுகள் மட்டும் விலகவில்லை
ஓ… இதுதான் காதலா!
மரணித்தேன் வார்த்தையில்
உயிர்த்தெழுந்தேன் நினைவலையில்
விட்டுச் சென்றால்
விலகி நின்றால்
வலிக்கவில்லை நீங்காத நினைவுகளால்
காதல் தோற்றதில்லை
கனவுகளும் நினைவுகளும் இருக்கும் வரை
உறக்கம் களவு போனது
நிலவின் நினைவுகளால்
தனிமை இனிமைதான்
நினைவில் அவள் இருக்கும் மட்டும்
தீராத காதல்
திடமாய் நினைவுகள்
திரும்பும் இடமெல்லாம் நீ
தனிமையில் நான்
சோகங்களை மறந்தேன்
சுகம் தர வருவாயென…
நாட்கள் கழிகின்றன
நினைவுகள் சுட்டுகின்றன
இன்று சூட்டாத மாலை
நாளை கல்லறையில் வைத்தென்ன…
இருந்தாலும் இறந்தாலும் வரமாட்டாய்
தெரிந்தும் தவிக்கிறது மானமில்லா மனது
விடைபெறும் நாள் தெரியவில்லை
உன்னிடமிருந்தும் உயிரிடமிருந்தும்
உயிர் வளி சுவாசிக்கும் வரையில்
நம் காதல்வலி தொடர்கதையே
உன்னை மறந்தேன்
நானும் இறந்தேன்…
- பீ. பெரியசாமி, விளாப்பாக்கம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.