உலகமேத் திரும்பிப் பார்
மண்ணில் மாந்தரைப் படைத்த இறைவா...
பிறக்கும் போதே என்னைக்
கருவில் அழித்திருக்கலாம்
நான் என்ன பாவம் செய்தேன்?
உலகமே! என்னை எள்ளி நகையாட...
அரிய சிம்மாசனத்தில் நீ இருக்கிறாய்
அம்மா அப்பா செய்த பாவத்திற்கு
பாவப்பட்ட கைதியாய் -
வீதியோரம் சிறை வைக்காதே.
தாழ் போட்டுப் பூட்டிய இரவு
கதிரவனின் ஒளி கண்டு
திரை விலகுவது போல.
என் வாழ்விலும்...
ஒளி விளக்கு எப்போது?
இறைவா... ஏக்கத்துடன்...
மனம் விட்டு என்
இதயத்தில் உள்ளதை
உயிர்வரியாய்த் தருகிறேன்
தன் நிறைவு வளம் கொண்ட நாடுகள்
மனித உதிரத்தைக் குடிக்க,
கந்தகக் குண்டுகளைப் பொதி செய்ய
ஆயிரம் கோடிகள் செலவு
பூகோள வையகத்தில்.
பூப்போல புன்னகைக்கும்
என்னைப் போன்ற அனாதைச்
சிறுவர்கள் எத்தனை?
அவர்கள் வாழ்விலும்
இருளை அகற்றி
பட்டினிச்சாவைத் தடுத்திட
கோடிப் பணத்தை செலவிடுவாய்.
உலக நாடுகளே... திரும்பிப் பார்...!
- த. ரூபன், திருகோணமலை, இலங்கை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.