பரந்தாமா...!
இரவுகள் நீளும் கனவுகள் ஆளும்
இதுவொரு சுகமெனச் சொல்வேனோ...
இமைகளை வருடும் உறக்கத்தை வெல்லும்
இடைவெளி கணங்களை வெல்வோனோ...
வரவுகள் பாயும் வழியினிற் போகும்
வகைதொகை இன்றி நிற்பேனோ...
வாழ்வினிற் சேரும் அனுபவப்
பாடம் வரும்வழி முதலிற் கற்பேனோ...
விரல்வழி நழுவும் நீரினைப் போலே
விழைவது மின்றி நிலைப்பேனோ...
வியந்திடும் கணங்களில் நிகழ்ந்திடும் நிகழ்வினில்
விழிகளும் ஒன்றி மலைப்பேனோ...
குரல்வழி கேட்டேன் குறைவெதும் இல்லை
கோபியர் போற்றும் ஸ்ரீ கிருஷ்ணா
குன்றினைச் சுமந்தாய்
குலமதைக் காத்தாய்
கொண்டதும் எனைத்தான் பரந்தாமா...!
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.