கொரோனாவே...!
வந்தேரியாக வந்த
கொரோணாவே...
வந்த தடம்
தெரியாது விலகிவிடு...
இந்த மருத்துவம்
பலனறியும் முன்னே...
தடுப்பூசிகளும்
தகுந்த எதிர்ப்பு சக்தியான
உணவு மூலிகை வகை வகையாகக்
குவிந்து கிடக்கிறது...
தமிழ் மண்ணில் போர்களமாக
எண்ணினாயா எம் குலத்தை
வீர தமிழச்சி முறம் கொண்டு
புலி விரட்டியது போல
குறுமிளகும் இஞ்சி திப்பிலி இலவங்கம்
போன்ற மூலிகை வைத்தே
உன்னை விரட்டி அடிப்பர்.
விலகி விடு ...
வீழ்ச்சி அடைவாய்...
தமிழ் பாரம்பரிய மருத்துவத்தில்
நீ காணாமற் காற்றில் கரைந்து,
மாண்டு போவாய் கொரோனாவே...
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.