சிலர் இப்படித்தான்
குறைகளை ஏற்க மறுக்கும் மனக்கிறுக்கு
எப்பொழுதும்
வேட்டை நாயின் வெறியேறிய முகம்
எதிலும் தப்பித்துக்கொள்ள
பிறரை விரல் நீட்டி
தான் விலகும் சமார்த்தியமெனும்
சகுனி குணம்
சுயநலம் மண்ணோடு
வேராய்ப் பின்னிக்கிடக்கிறது
மழை நானென
வார்த்தை சித்துக்குக் குறைவில்லை
எனக்கொரு சந்தேகம்
எப்படி முடிகிறது உன்னால்
உறக்கமெனும் சாத்தியப் பொழுது
கல்லுக்கு என்ன சலனம்
இருந்து விடப்போகிறது எறிவாங்கிய
குளத்திற்குத்தானே பாடு
சமூகம் எப்பொழுதும் சமதளமற்றது
சமீப காலமாய்க் கிட்லரைக்
கொண்டாட இரசிகர்கள்
கூடிக்கொண்டேப் போகிறார்கள்.
- இந்திரா அரசு, தஞ்சாவூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.