கரைசேராப் படகு போல...
என்னவளே என்னவளே...
என்னை விட்டுப் போனவளே...
போனவளை நான் நினைத்து.
போராடும் கால இது.
கரம் பிடித்தேன் கரைசேர்க்க...
கரைசேராப் படகு போல
ஆழ்கடலில் தத்தளிக்கிறேன்...
ஆண்டவனின் விதி போல...
தனியாக நான் பிறந்தேன்
தனித்திருக்க மாட்டேன் - என்று.
தாலி வரம் கேட்டு வந்தாய்
தாம்பூலத் தட்டுடனே...
மணமேடை கண்ட நாள் முதலாய்
மன மகிழ்ச்சி தந்தாயே...
மன வேதனையை நீ தந்து,
மறுகணமேப் பிரிந்து விட்டாய்
பிரிந்து விட்ட நாள் முதலாய்,
பிரிவென்னும் வலி தந்தாய்,
விதி வந்து வாழ்(க்)கையில் விளையாட...
வினையாய் போனது வாழ்(க்)கை
நினைவுகள் இருக்கும் வரை,
நிம்மதியாய் நீ உறங்குவாய்
தெய்வக் கல்லறை மீது.
படியும் தூசிகளை
என் கண்ணீர் (த்) துளிகள் கழுவும்
- த. ரூபன், திருகோணமலை, இலங்கை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.