இயற்கையுடன்...
மூச்சு
முட்டுகிறது...
முகக்கவசம் அணிந்து
சகமனிதரிடம் பேசுவது...
நானும் மலரும்
பேசிக் கொண்டாடினோம்...
வாசமும் நேசமும்
தவழும் படி
முக கவசமில்லாமல்...
கிரிவலப் பாதையில்
மரங்களுடனும்
அதன் பசுமையுடனும்
பேசி மகிழ்ந்தேன்...
புகையில்லா வண்டி
சத்தமில்லாமல்
நிசப்த்ததில்
நீந்தி வரும்
மயிலின் அகவலும்
மானின் துள்ளலோசையும்
கண் தேடுகிறது...
காட்சியாக வட்டமடிக்கிறது
மனதில்...
நிஜமெது கனவெது
உணராத மர்மமாய்
தோன்றும் காட்சியாக
மேகமும் தென்றலும்
மேலேட்டமாக மெட்டிசைத்து
குழலில்லாமலே கீதமிசைத்தது...
காதில் வருடியது...
அங்கங்கே
பூந்தோட்ட மலர்கள்
காற்றில் அசைந்து
கதை பேச
அழைக்கிறது...
தோட்டக்காரனின்
காவலையும் மீறியடியே...
மாட்டு வண்டியும்
அங்கொன்றும்
இங்கொன்றும்
மணியோசை ததும்ப
ராஜநடை பயில்கிறது...
இன்னு மின்னும்
காட்சிகளை வரிகளில்
சிறைபிடிக்க
மனமில்லாமல் சிறகடித்து
மிதக்கவிட்டேன் மன ஊஞ்சலில்...
- ஞானப்பிரியதர்ஷினி, கெருகம்பாக்கம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.