அய்யனார் நினைவுகள்
அய்யனார் அரிவாள்
கீழே விழுகிறது
பலியாட்டின் தலை
******
அய்யனார் அரிவாள்
காப்பாற்ற இயலவில்லை
ஆணவக் கொலை
******
அய்யனார் அரிவாள்
சாட்சியாக நிற்கிறது
சாதிமறுப்புத் திருமணம்
******
அய்யனார் அரிவாள்
கூர்மழுங்கி இருக்கிறது
குடிகாரன் பேச்சு
******
அய்யனார் அரிவாள்
தடை விலகி நிற்கிறது
திருட்டுக்கான வேண்டுகோள்
******
எல்லை தாண்டும் முன்
அய்யனாரைக் கும்பிடுகிறான்
ஆடு திருடும் களவாணி
******
தலைக்கு மேலே
அய்யனார்க்குக் காவல்
பௌர்ணமி நிலா
******
அய்யனார் விழிகள்
பார்த்துக் கொண்டே இருக்கும்
படையலில் சாராயம்
******
அய்யனார் கோயில்
அடைக்கலம் கொடுக்கிறது
கொள்ளையடித்த பணம்
******
சுருட்டுப் புகை வாசம்
பயங் காட்டுகிறது
அய்யனார் சிலை.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.