வெங்காய வாழ்க்கை
பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம் என்றால்
அது என்ன வாழ்க்கை
பெரிதாய்ப் பெயரை நிலைபெறச் செய்தால்
அதுவே ஒரு நல் வாழ்க்கை.
ஊரும் எறும்பும் விட்டுச் செல்லும்
தன் பின் ஒரு தடத்தை
உயரும் வாழ்வில் உனக்கென ஒதுக்கு
ஒரு பெயர் தரும் இடத்தை.
உரித்துப் பார்க்க உள்ளே
ஒன்றும் இல்லாக் காயம் வெங்காயம்
ஒன்றாய்ச் சேர்ந்து பலவாய்ப் பிரிந்து
ஒருநாள் சேரும் உண்மை அன்றோ
உன்னரும் வாழ்க்கை
வாழத்தானே பிறந்தோம் எனில்
வாழ்ந்து காட்டுவோம் நன்றாய்
வையம் உளநாள் நிலைக்கும் வண்ணம்
வகைசெயல் செய்வாய் ஒன்றாய்
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.