மௌனம் பிழையே!

மௌனம்
பிழையா
வரமா
சாபமா
ஆராய்கின்றேன்.
ஒவ்வொரு
சூழலில்
வெவ்வேறு
வழித்தடங்கள்
வாழ்க்கையில்.
கல்லுக்குள்
ஈரம்
கரைந்துருக
மனம்
துடிக்கின்றது.
சிப்பிக்குள்
நுழைந்த
மழைத்துளிகள்
முத்துக்களாக.
மனதின்
இறுக்கதில்
ஆழ்ந்த
சிந்தனையே
மௌனம்.
காத்திருப்பின்
வரமாக
மௌனம்
அந்நிலை
அகிலத்தின்
பரவசம் .
ஞானிகள்
ஞானம்
வெளிப்படும்
மௌனத்தில்.
நாவின்
நவரசங்கள்
சொற்புலத்தின்
பேரரசா்
சொல்லிய
சொற்களுக்கு
சொற்கோவையாய்
உருமாற்றம்.
எண்ணிய
எண்ணங்களுக்கு
சுருக்கக் குறியீட்டாய்
மௌனம்.
ஆழ்மனதில்
புதைந்த
எண்ணங்கள்
வெளிப்படுத்துவதில்
மௌனம்
சாபமே…!
குருவின்
காலடியில்
சுற்றித்திரியும்
அறிவுபெறா
சீடனின்
மௌனம்
பிழையே…!
உள்ளத்தில்
நிலைக்கொண்ட
அன்பின் தாக்கம்
தயக்கத்தில்
பாழாய்ப் போனதே...!
கிணற்றுக்குள்
ஊற்றெடுக்கின்ற
நீரைப்போல
உள்ளத்தில்
எண்ணங்கள்
பெருக்கெடுக்கின்றதே…!
மேலெழும்பாத
நீரைப்போல
நாவில்
வெளிப்படாத
சொற்கள்
பிழையே…!
அரசகட்டில்
ஆட்சி புரியும்
அரசனின்
மௌனம்
மக்களுக்கு
சாபமே…!
காதலியின்
பார்வையில்
சிக்குண்ட
காதலனின்
மௌனம்
சாபமே…!
இல்லறத்
தலைவன்
பொருட்தேவை
அடைவதில்
மௌனம்
பிழையே…!
வாழ்க்கை
ஓடத்தில்
நீந்துகின்ற
மானிடனின்
நிலைக்களன்
மௌனம்
மூன்றுமே…!
இப்பூவுலகம்
ஏற்குமோ…?
மௌனம்
சாலச்சிறந்ததோ…?
இடம் பொருள் ஏவல்
மூவிடங்களையும்
உணா்த்தும்
அணிகலேனே
மௌனம்…?
- முனைவா் சி. இரகு, வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.