ஏழையின் இரவு
களைத்துப் போன உடம்பும்
கண்ணீரில் நீந்திய விழியும்
இளைப்பாற எண்ணிய நேரம்...!!
குழிவிழுந்தவயிறு
விழியை விரிவாக்கிட...
பசியோ...
தூக்கத்தைத் தொலைத்துவிட்டு
ஏக்கத்தை மிளிர வைத்தது
காற்றில் விழுந்த
தூசியைப் போல
இமைகளை மூட அனுமதித்தது
கண்களில் நீர் பெருக்கெடுக்க
கடும்குளிரும் வாட்டி எடுக்க
வெறும் வயிறோ
வெள்ளம் போல்
ஒலி எழுப்ப
இன்னும் எவ்வளவு
நீளுமோ இந்த இரவு...!!
என்ற வினாவுடன்
இமைகள் இறுகியது
ஏழையின் வயிறைப் போல...
- வ. கமல் பிரகாஷ், திருச்சிராப்பள்ளி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.