ஹைக்கூ கவிதைகள்
பசியுடன் காத்திருக்கும்
வரிசையில் பிச்சைக்காரர்கள்
கருவறையில் இறைவன்
*****
சாலையோர ஓவியம்
வரைந்ததும் விழுகிறது
வஞ்சிக்கும் மழை
*****
இலைகளில் தெரியும்
அழகிய ஓவியம்
இரையுண்ணும் வண்டு
*****
மழை ஓய்ந்த பின்
சாலைகளில் தென்படுகிறது
சிறு பெரு குளங்கள்
*****
வாசலில் மாக்கோலம்
அழகாய்த் தெரிகிறது
எறும்பின் வரிசை
*****
சாலையோரப் பிச்சைக்காரன்
பாத்திரத்தில் நிற்கிறது
இடைவிடாத மழைநீர்
*****
கடவுள் முகம் தெரிகிறது
கோவில் வாசலில்
நாய்க்கு இரையிடும் பிச்சைக்காரி
*****
தரையில் உருண்டோட
கோலம் வரைகிறது
சிறுவன் கழிக்கும் சிறுநீர்
*****
சிறை வாசலுக்கு
தினமும் வந்து போகும்
எசமானரைத் தேடி நாய்
*****
மழை இரவின் தனிமையில்
துணையாய் வருகிறது
தவளைகளின் சத்தம்
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.