முகமூடி மனிதர்கள்
பிள்ளைப் பருவத்தில் கள்ளமில்லாச் சிரிப்பு
இளம் பருவத்தில் குறு குறு சிரிப்பு
நடுவயதில் நக்கலான சிரிப்பு
வயோதிகத்தில் வக்கிரமான சிரிப்பு
முதுமையில் முதிர்ச்சியான சிரிப்பு
ஒரே முகம் பல சிரிப்புகள்
வக்கிர மனிதர்களின் வக்கிரமான பார்வை
கண்ணாலே கற்பழிக்கும் கயவர்களின் பார்வை
முகங்களின் பின்னே மறைந்திருக்கும் பார்வை
காலங்கள் செல்லச் செல்ல
எண்ணங்களில் ஏன் இந்த மாற்றம்?
கூட இருந்து கொண்டேக்
கொடுமையைச் செய்யும் முகமூடிகளை
கூர் வாளால் கொன்றுவிட நேரம் ஆகாது
இன்னும் எத்தனை காலம் தா (நா) ம் பொறுத்திருப்பது?
முகமூடியை கிழிக்கும் நிலை வரும் நாள் எந்நாளோ?
இறைவா...!
பாலியல் வக்கிர கொடூரங்கள்
இல்லாத நாட்களைக் கொடுப்பாயா…?
அந்நாளில்தான் உண்மையான முகத்தைப்
பார்க்க முடியும்...!
- பாலா கணேசன், சென்னை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.