விருந்தோம்பல்
அனைவரின்
விருப்பத்திற்காகவும்
விருந்தினர் ருசிக்காகவும்
தென்பட்டது சேவல்...
ஒரு கோப்பை நீரில்
மொத்த ஆசைகளை முடித்து வைத்தார்
கத்தி கரம் ஏந்திவிடாமல் மாமா...
கட்டாயமான முறையில்
காவு கொடுப்பட்டது உயிர்
விருந்தினரெல்லாம்
விரும்பி உண்ணும் வேளையில்
வளர்த்தவன்
இலை மீது
துடிக்கிறது
மசாலாவில் குளியில் முடித்த
கம்பு கேழ்வரகைக் கொத்தித் தின்ற
கழுத்துத் துண்டில்
வளைந்து கிடக்கிறது
வளர்ப்பினால்
கொடுத்த விருந்தோம்பல் ருசி...
- கவிஞர் கார்கவி, நாகப்பட்டினம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.