நம்பிக்கை கொள்!
ஒரு பொழுதும் நம்பிக்கைகள்
குறையவேக் கூடாது !
நம்பிக்கைகள் உன்னோடு
இருக்கும்வரை நீ ஜெயிப்பாய் !
உன் நம்பிக்கை
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் !
உன் நம்பிக்கையின்
அளவைப் பொறுத்தே
உன் வாழ்வின் வெற்றிகள் !
உன் நம்பிக்கையின்
ஆழத்தைப் பொறுத்தே
உன் வாழ்வின் ஆனந்தங்கள் !
உன் நம்பிக்கையின்
தீவிரத்தைப் பொறுத்தே
உன் முயற்சிகள் !
உன் நம்பிக்கையே
என்றும் உன்னை விட்டு அகலாத
உயிர் தோழன்/தோழி !
உன் நம்பிக்கையே
உனது நாளைய வாழ்வின்
அஸ்திவாரம் !
உன் நம்பிக்கையே
உன் கையில் இருக்கும்
பிரம்மாஸ்திரம் !
உன் நம்பிக்கையே
உன் லட்சிய வாழ்வின்
எஜமானன் !
உன் நம்பிக்கையே
கரடு முரடான வாழ்க்கைப் பாதையில்
உன் வழியைக் காக்கும் செருப்பு !
உன் நம்பிக்கையே
இருள் தரும் புரியாத சூழ்நிலைகளில்
உன் கையிலிருக்கும் வழி காட்டும் விளக்கு !
உன் நம்பிக்கையே
சம்சாரப் பாலைவனத்தில்
உனக்கு நிழல் தரும் சோலை !
உன் நம்பிக்கையே
நா வரண்டு போகும் அவமரியாதைகளில்
உனக்குத் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் !
உன் நம்பிக்கையே
உன் மனது பலவீனமாகும் போது
உனக்கு ஊட்டம் தரும் அற்புத அமிர்தம் !
உன் நம்பிக்கையே
உடலை வருத்தும் வியாதிகளிடமிருந்து
உன்னைக் காக்கும் மருத்துவர் !
உன் நம்பிக்கையே
இடிந்து போக வைக்கும் நஷ்டங்களில்
உன்னிடம் இருக்கும் காப்பீடு !
உன் நம்பிக்கையே
உன்னிடமிருந்து யாரும் திருடமுடியாத
என்றுமே அழியாத வைப்புநிதி !
உன் நம்பிக்கையே
உன் மரணம் வரை உன்னோடு வரும்
ஒரே உன்னத வழித்துணை !
உன் நம்பிக்கை மீது
முதலில் நம்பிக்கை வை !
உன் நம்பிக்கை வளர
நான் நம்பிக்கையோடு
வேண்டுகிறேன் !
உன் நம்பிக்கை வளர
நீயும் நம்பிக்கையோடு
வேண்டிக்கொள் !
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.