கதவிற்கு வெளியே பூட்டு
என்னை உறக்கத்தில்
போர்த்தி விட்டு
யாரோ ஒருவர் கனவோடு
நடை போடுகிறார்...!
உரக்கப் பேசியவர்
என் கதவுகளின்
தாழ் சத்தத்தில்
மேலும் பிதற்றுகின்றனர்...!
ஏற்காத இடத்தில்
முகத்தில் நீர் ஊற்றாமல்
கலைந்த கனவுகள் ஏராளம்...!
சாவி இடுக்கில் ஏதோ முனுமுனுப்பு
நான்தானா எனக் கேட்கிறது
உடலைப் பிரிந்து காது...!
காற்றாடியின் ஓசைக்கு
வழியிடும் காதுகளுக்கு
வயது முற்றிவிடுகிறது
சலிப்பின் காரணமாக...!
மொத்தம் எடையேறிய
விடயங்களுக்கு
போர்வையைச் சேர்த்து
விடப்படுகிறது
கதவிற்கு வெளியே பூட்டு...!
- கவிஞர் கார்கவி, நாகப்பட்டினம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.