வலி மறக்கிறது...!
அவசரமான ஓட்டத்தில்
எழுந்து தலை சீவாமல்
முகம் துடைத்து
அரக்கப்பரக்க ஆடை மாற்றும்
அப்பனிடம்...
'ஏங்க இருங்க டீ சாப்பிட்டுப் போகலாம்'
என்னும் மனைவியிடம்,
எனக்கு அதற்கெல்லாம் டைம் இல்லை
என ஆவேசப்படும்
அப்பாவின் கோவத்தின் இறுதியில்
அப்பா என்ற நளினக்குரலில்
வந்து நிற்கிறாள் அப்பனின் அம்மை...
என்னம்மா? எனும் சொல்லில்
குறைகிறது கோபம்...
ஒரு கையில் உணவும்
மறுகையில் புரோகிராஸ் ரிப்போர்ட்டுடன்
ரிப்போர்ட் செய்கிறாள் அம்மையிடம்
பாசத்தில் அப்பாவுடைய மகள்...
- கவிஞர் கார்கவி, நாகப்பட்டினம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.