நட்புக்கு மரியாதை!
நட்பு என்பது
சூரியன் போல்
எல்லா நாளும்
முழுமையாய் இருக்கும்
நட்பு என்பது
கடல் அலை போல்
எப்போதும்
கரைக்கு வந்தேத் திரும்பும்
நட்பு என்பது
நெருப்பு போல்
எல்லா மாசுகளையும்
அழித்து விடும்
நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும்
ஒரே மட்டமாய் இருக்கும்
நட்பு என்பது
நிலம் போல்
எதையும் பொறுமையாய்த்
தாங்கிக் கொள்ளும்
நட்பு என்பது
காற்றைப் போல்
எல்லா இடங்களிலும்
நிறைந்து இருக்கும்
பல வண்ணமலர் போல
நேசங்கள் கூடும்
நட்புக்கு... நாம்...
மரியாதை செய்வோம்!
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.