அன்பின் காதலோடு சொல்கிறேன்

ஐ ஆம் சாரி!
நான் சரி என்றால்
அவள் தவறு என்பாள்
எனக்கு இரவு பிடிக்கும் என்றால்
அவளுக்குப் பகல் பிடிக்கும் என்பாள்
நிலா வரும் போது
உலா வரணும்னு சொன்னால்
சூரியன் பார்வைதான்
பட வேண்டும் என்பாள்
வெளியேக் கரித்துக் கரித்துக் கொட்டினாலும்
உள்ளுக்குள் ஏதோ ஒரு காதல்
அவள் மீது ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது
வெளியே யாரிடமும்
என்னைப் பற்றி விட்டுக் கொடுக்காமல் பேசினாலும்
அவள் அன்புக்காக
அருகே செல்லும் போதெல்லாம்
கரித்துக் கரித்துத்தான் கொட்டுவாள்
மொத்தத்தில்
போட்டா போட்டி போட்டு
விதண்டாவாதம் செய்து
எலியும், பூனையுமாய் இருந்தோம்.
உங்களுக்குப் புரியும்படிச்
சொல்ல வேண்டுமென்றால்
ஒரு டாம் அண்ட் ஷெர்ரி
வாழ்க்கையைத்தான் வாழ்ந்தோம்
என் மீது பட வேண்டிய
அவள் ஸ்பரிசங்கள்
அலைபேசியில் மட்டும்தான் இருந்தது
இரவில் படுக்கையில்
என்னைக் கட்டிக் கொள்ள வேண்டிய
அவள் கரங்கள்
அவளுக்குப் பிடித்தமான
டெடியின் மீது தான் இருந்தது
விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கை
கெட்டுப் போகாது என்பார்கள்
ஏனோ சுடும் வாழ்க்கையில்
படும் வரை புரிவதே இல்லை
எல்லாம் தொலைத்தப் பிறகு
நானும் தொலைந்த பிறகு
அவள் கல்லறையில்
அன்பின் காதலோடு சொல்கிறேன்
ஐ மிஸ் யூ
ஐ ஆம் சாரி!
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.